மகிந்த சிந்தனையின் கீழ் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கென சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன. அது இப்பொழுது அனைத்துக் கட்சிகளின் கூட்டம் என்ற பெயரில் அனுமான் வால் போன்று நீண்டு கொண்டே போகிறது. அதன் இறுதி முனையில் தீர்வு இருக்கிறதா? அல்லது தீப்பந்தம் உள்ளதா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.
அறுபது ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் தேசிய இனப்பிரச்சினைக்கு எனக் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு இதுதான் முதல் தடவையல்ல. ஏற்கனவே, தோல்வியடைந்த பல மாநாடுகளின் வரிசையில் தற்போதையது கடைசியாக வந்து நிற்பதாகும். இச்சர்வகட்சி மாநாடு மிகுந்த ஆரவாரத்துடன் கூட்டப்பட்டு அதில் உரையாற்றிய ஜனாதிபதி இனப்பிரச்சினையின் கௌரவமான தீர்வுக்கு தான் அர்ப்பணிப்புடன் செயலாற்றப் போவதாகக் கூறி இருந்தமை நினைவிற்குரியதாகும். ஆனால், அத்தகைய அர்ப்பணிப்பு எவற்றின் மீது முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதைஇப்போது எல்லோரும் நன்கு அறிவர்.
இச்சர்வகட்சி மாநாடு இப்போது அனைத்துக் கட்சிகளின் கூட்டம் என்ற அளவில் இடையிடையே கொதிப்பிக்கப்பட்டு வருகின்றது. அதன் தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண இருந்து வருகிறார். அவர் ஒரு இடதுசாரித் தோற்றம் காட்டி வருபவர். அமைச்சர் பதவிபெற்ற முன்னாள் இடதுசாரிகளில் அவரும் ஒருவர். இவர்களிடம் இன்று இடதுசாரிக் கொள்கைகள் எதுவும் கிடையாது. ஆனால், ஒரு மெல்லிய வேடம் மட்டும் எஞ்சி நிற்கின்றது.
இவ் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஆலோசனை வழங்கவென ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவானது தமக்கிடையில் ஒருமித்த கருத்துக்கு வர முடியாது நான்கு விதமான ஆலோசனைகளை முன்வைத்தன. அதில் பெரும்பான்மைக் குழு முன்வைத்த ஆலோசனைகளில் சில கவனத்தில் கொள்ளத்தக்கனவாக இருந்தன. ஆனால், அரசாங்கம் அதன் மீது எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.
இந்நிலையிலேயே பிரதான கட்சியின் யோசனைகள் வற்புறுத்தப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி தமது முன்னைய தீர்வாகக் கொண்டுவந்த பதின்மூன்றாவது திருத்தமான மாகாண சபைக்கு மேலே செல்லாத யோசனைகளையே முன்வைத்தது. கடந்த மே தினத்தில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியிட்டு பின் திருத்தப்பட்ட யோசனைகள் மாவட்டத்திற்கு அப்பால் செல்லாத யோசனைகளை முன்வைத்தது. இவ்வாரத்தில் ஜாதிக ஹெல உறுமய வைத்த ஆலோசனைகளில் கிராம மட்டத்திலான தீர்வு யோசனைகளை முன்வைத்திருக்கிறது. அடுத்துஜே.வி.பி. தீர்வு முன்வைக்குமானால் அது குடும்ப மட்டத்தில் அதிகாரப் பகிர்வு இடம்பெறுவதையே முன்வைக்கும் நிலை வரலாம். இவற்றை அவதானிக்கும் போது இவை யாவும் தேசிய இனப்பிரச்சினைக்கு இன்றைய யதார்த்தத்தையொட்டி முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகளா அல்லது இலங்கை நாட்டை மேன்மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செலும் யோசனைகளா என்றே கேட்கத் தோன்றுகின்றது.
சுதந்திரக் கட்சியின் யோசனைகளை திருத்தியமைத்த ஜனாதிபதி ஒற்றையாட்சியையும் பௌத்த மத மேலாண்மையையும் வற்புறுத்திக் கொண்டார். ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகளில் மேலும் பல படிகள் சென்று இலங்கை ஒரு அதி உயர் பௌத்த சிங்கள நாடு என்பதை பிரகடனப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கை சிங்களவர்களுடைய நாடு. பௌத்தம் தேசிய மதமாக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர்கள் ஏனைய நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் போன்று வாழ்ந்து விட்டுப்போகலாம். அவர்களுக்கு எவ்வித உரிமையும் இந்நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் இல்லை. தென் இந்தியாவில் இருந்து வந்த அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை கோரும் எவ்வித உரித்தும் இங்கே கிடையாது. வேண்டுமென்றால் இந்தியாவில் சென்று சுயநிர்ணய உரிமையைக் கோரட்டும் எனக் கூறியுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சி தீவிர பௌத்த மேலாதிக்க வெறி பிடித்தோரின் கட்சி என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். அந்தக் கட்சி மகாவம்சம் முன்வைத்த திரிபுகள், வக்கிரங்கள் வரலாற்றுப் புரட்டுகளில் காலூன்றி நின்றே தமிழர்களுக்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் எதிராகக் கருத்துரைத்து யோசனைகள் வெளியிட்டுள்ளன. ஒற்றுமை யாதெனில், மகாவம்சத்தை எழுதியவரும் அன்றைய ஒரு பௌத்த பிக்குவானவர் தான். இன்றைய யோசனைகளை முன்வைத்திருப்பவரும் பிக்குகளின் பிக்கு தான்.
மகாவம்சம் என்ற மஞ்சள் கண்ணாடிக்கு ஊடாக இலங்கையின் வரலாற்றைக் காண்பதும் அவற்றின் மீது காலூன்றி நின்றவாறே சமகாலத்தில் எரியும் பிரச்சினையாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படுவதும் அதியுயர் அறிவீனம் என்றே கொள்ளல் வேண்டும். அண்மையில் ஒரு பொது வைபவத்தில் உரையாற்றிய அநுரா பண்டாரநாயக்கா இந்நாட்டில் ஏற்பட்ட துரதிர்ஷ்டம் யாதெனில், பௌத்த பிக்குகள் அரசியலுக்குள் வந்தது தான்" எனக் கூறி இருந்தார். அவரது கூற்று மிகச் சரியானது தான். ஆனால், அதைவிடவும் மோசமான துரதிர்ஷ்டம் என்னவெனில், பௌத்த மதபீடங்களையும் அவற்றின் தலைமைகளையும் மீறி எந்தவொரு சிங்கள அரசியல் தலைமைகளும் ஆட்சி செய்யவோ, அதிகாரத்திற்கு வரவோ முடியாது என்பது தான்.
எனவே, ஹெல உறுமய கட்சியானது தமிழர்கள் எதிர்நோக்கி நிற்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் நியாயமான தீர்வு யோசனைகளை முன்வைக்காது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் அதிதீவிர யோசனைகளை முன்வைத்திருப்பது எவ்வித ஆச்சரியத்தையும் தரக்கூடியதொன்றல்ல.
அனைத்துக் கட்சிகளில் பிரதான கட்சிகள் முன்வைத்துள்ள ஆலோசனைகள் மாகாணங்களுக்குள்ளும், மாவட்டங்களின் கீழும், கிராமங்களிலும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதையே குறித்து நிற்கின்றன. இவை அனைத்து ஆலோசனைகளும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளாக முன்வைக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அதேவேளை, இந்த யோசனைகள் எவ்வாறு ஒற்றையாட்சியையும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தையும் மேலும் வலுப்படுத்தி நிலைநிறுத்துவது என்பதை மையமாகக் கொண்டே முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, தேர்தல் முறைமையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு தனது யோசனைகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன் வந்துள்ளது. அச்சீர்திருத்தத்தில் தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறைமையையும் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையையும் இணைத்த யோசனைகளை முன்வைத்துள்ளது. அதற்கான காரணமாக நிலையான அரசாங்கம் ஒன்றைக் கொண்டுவரக்கூடிய தேர்தல் முறைதான் நாட்டை அபிவிருத்தி செய்யத்தக்கதாக அமையும் என்றே கூறப்படுகின்றது.
ஆனால், உண்மை யாதெனில், இன்றைய பாராளுமன்ற ஆட்சியில் சிறுபான்மையினரின் கட்சிகளுடைய தயவையும் ஆதரவையும் பெற வேண்டிய ஒரு சூழலே பிரதான பௌத்த சிங்கள மேலாண்மைக் கட்சிகளுக்கு இருந்து வருகின்றன. அத்துடன், புதிய தேர்தல் சீர்திருத்தத்தின் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மிகக் குறைந்த நிலைக்குக் கொண்டு செல்லும் உள்ளார்ந்த நோக்கும், போக்கும் அத்தேர்தல் சீர்திருத்தத்தினுள் அடங்கியுள்ளன. அதனாலேயே மலையகப் பாராளுமன்றக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் அதனை எதிர்த்து வருகின்றன. தமிழ்க் கட்சிகள் எப்படி வந்தாலும் தமிழ் மக்களை அமுக்கும் தேர்தல் சீர்திருத்தம் என்றே கொள்கின்றன.
பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் இவ்வாறான தேர்தல் சீர்திருத்தங்களும் மறுசீரமைப்புகளும் அடிக்கடி நிகழ்ந்து வரும் போக்குகள் நீடித்து வந்துள்ளன. குறிப்பாக, அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள் என்பனவற்றின் பிரதிநிதிகள் ஆட்சிமன்றங்களில்அதிகரிக்காத வண்ணம் அடிக்கடி தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது நடந்து வந்துள்ளன.
அந்த வகையிலே ஜே.ஆர். விகிதாசாரத் தேர்தல் முறையைக் கொண்டுவந்த போதும், ஏதோ நினைத்துத் தான் கொண்டு வந்தார். அதனால், சிறுபான்மைக் கட்சிகள் நன்மையடைந்து வரும் சூழலில் இப்போது அதிலும் மாற்றம் கொண்டு வரத் தீர்மானிக்கப்படுகிறது.
யுத்தமாக எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, தேர்தல் மறுசீரமைப்புக்கு அதிவேக அவசரம் காட்டப்படுகிறது. இவ் விரண்டிலும் உள்ளடக்கி நிற்கும் சாராம்சம் தான் சற்று ஆழமாக நோக்கி சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
2 comments:
dasf升降机 同声翻译 同声传译 同声翻译设备 文件柜 会议设备租赁 同声传译设备租赁 表决器租赁 更衣柜 钢管 无缝钢管 服务器数据恢复 论文发表
升降平台 登车桥 升降机 升降机 铝合金升降机 液压升降机 液压机械 升降平台 升降台 高空作业平台 升降机 升降平台 弹簧 数据恢复 RAID数据恢复 无缝管 博客
WOW Gold WOWGold World Of Warcraft Gold WOW Power Leveling WOW PowerLeveling World Of Warcraft Power Leveling World Of Warcraft PowerLeveling
Breathalyzer Gas Alarm Breathalyser Co Alarm Co Detector Alcohol Tester Alcohol Tester Gas Detector
Google左侧排名 Google排名 网站排名 Google优化 搜索引擎优化 google左侧排名 google排名 google排名 google排名 搜索引擎营销 网络营销 网站优化 SEO google排名服务 台州网站建设 网站设计 网站推广 网站优化 搜索引擎优化 网站优化 网站建设 google排名 google优化 网站优化 搜索引擎优化 SEO google排名 Google排名 Google排名 Google排名 网站优化 搜索引擎优化 SEO Google排名
fdsf
yuregtdf
wow gold
cheap wow gold
buy wow gold
cheapest wow gold
world of warcraft gold
wow
world of warcraft
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
maple story
maple story mesos
maplestory mesos
maplestory
maple story mesos
maple story cheats
maple story hacks
maple story guides
maple story items
lotro
lotro gold
buy lotro gold
lotro cheats
lotro guides
google排名
google左侧排名
google排名服务
百度推广
百度排名
商业吧
网站推广
福州热线
体育博客
股票博客
游戏博客
魔兽博客
考试博客
汽车博客
房产博客
电脑博客
nba live
logo design
website design
web design
窃听器
手机窃听器
商标设计
代考
高考答案
办理上网文凭
代考
Post a Comment