Saturday, June 2, 2007

மாவடிஓடைப் பாலத்திலிருந்து படையினர் பின்வாங்கல்

மட்டக்களப்பு குடும்பிமலை எல்லையோரக் காட்டுப்புறத்தில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம் பெற்றுள்ளன. இன்று முற்பகல் 11.20 மணியளவில் மாவடிஓடைப் பாலத்திருந்து விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள காட்டுப் பகுதிகள் நோக்கி எறிகணைச் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமர்களையடுத்து சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளுடன் முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோடினர். படையினரின் முன்னேற்ற முயற்சியின் பின்னர் படையினர் ஏற்கனவே நிலைகளை அமைத்திருந்த மாவடிஓடைப் பாலத்திலிருந்து பின்வாங்கிச் சென்றுள்ளனர். இதனை விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அவர்களும் உறுதி செய்துள்ளார்.

இன்றைய படைநடவடிக்கைகளுக்கு ஆதரவாக சிறீலங்கா வான்படையினர் இரு முறை வான்வெளித் தாக்குதலை நடத்தியிருந்தனர். எனினும் படையினரின் வான்வெளித் தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

No comments: