Wednesday, June 6, 2007

தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் உணர்வு பூர்வமாக இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சியில் ஆரம்பமாகின. எழுச்சிப் பேரணியானது கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி கிளிநொச்சி மத்தியகல்லூரி விளையாட்டரங்கில் நிறைவடைந்து.

பேரணியில் தியாகி.பொன்.சிவகுமாரன் மற்றும் மேஜர் முரளி இருவரினதும் திருவுருவப் படங்களைத் தாக்கியவாறு ''எமது நிலம் எமக்கு வேண்டும்'' , ''எல்லோர்க்கும் நல்வாழ்வு தரும் நிம்மதியான கல்வியே எமக்கு வேண்டும்'' எனும் கோசங்களுடன் பேரணி நகர்ந்தது.

மாணவர் எழுச்சி நாளுடன் கூடவே ஆயுத போராட்டத்தின் முதல் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 33 ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளும் அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்றன.

No comments: