




ஸ்ரீலங்கா இராணுவத்தால் அண்மையில் கைப்பற்றப்பட்ட வவுனியா – மன்னார் முன்னரங்க எல்லைப்பகுதி கிராமங்களான முள்ளிக்குளம், விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில்தமிழீழ விடுதலைப்புலிகளினால் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கமாண்டோ தாக்குதலில் பம்பைமடுவில் ஆயுதக்கிடங்கு தகர்க்கப்பட்டும், பவள் துருப்பு காவி வாகனம் உட்பட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரந்திரையன் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 40 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இவ்விடங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா படையினர் பெருமளவு ஆட்டிலறி எறிகளை மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment