Friday, July 27, 2007

செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை - ஈபிடிபி

கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடமிருக்கும் (ரிஎம்விபி) ஆயுதங்கள் அனைத்தும் களையப்படவேண்டும் என ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா ஆங்கில இணையத் தளத்துக்கு கருத்து தெரிவித்திருந்ததாக வெளிவந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.

அவ் ஆங்கில இணையத்தளத்தை ஆதாரமாகக் கொண்டு சில ஊடகங்களும் இணையங்களும் இச் செய்தியை வெளியிட்டிருந்தன. சக அமைப்புகளோடு எமக்கு முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் பேசித்தீர்வு காணும் வழி முறையினையே ஈபிடிபி விரும்புகின்றது.

அண்மையில் கருணா தலமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் எமக்கும் இடையில் நிகழ்ந்த கருத்துப்பாரிமாற்றங்களின் பின்னர் இரு அமைப்புகளும் இணைந்து பகமைத்தவிர்ப்பு கூட்டறிக்கை ஒன்றினையும் வெயிட்டிருந்தமை அறிந்த விடயமாகும்.

இதற்கு மாறாக ஈபிடிபி ஒரு போதும் அனாவசியமாக எந்த கருத்துக்களையும் வெளியிட விரும்பாது என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவ்வாறான தவறுகளை தவிர்த்துக் கொள்வதும், தவறான செய்திகளுக்கான மறுப்பினை வெளியிடுவதும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டிய கடமையாகும்.

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் (ஈபிடிபி) தகவல் தொடர்புச் செயலாளர் மேற்கண்ட செய்தியினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.




கருணா தலைமையிலான ரிஎம்விபி யின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா தகவல் வெளியிட்டிருப்பதாக இணையங்களில் பதிவாகிய செய்தியினை கீழே தகவலுக்காக "ஈழம் நெற்" இணைத்துள்ளது.

ஸ்ரீலங்காவின் துணை ஆயுதக் குழுவின் தலைவராக கருணா

ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவரான கருணா அரச பாதுகாப்புடன் இருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பியின் செயலாளரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்களஸ் தேவானந்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க படைகளின் பாதுகாப்பிலேயே கருணா இருப்பதாகவும் அவருடை இருப்பிடத்திற்கும் அவருடைய போக்குவரத்திற்கும் ஸ்ரீலங்கா இராணுவம் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இதுவரை காலமும் கருணாவிற்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறி வந்த பொய் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அரசாங்க அமைச்ர் ஒருவரே கருணாவிற்கு தமது பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு வழங்குவதை ஏற்றுக் கொண்டுள்ளமை முக்கியத்துவம் மிக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் தமது உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாள்களை கருணா தலைமையிலான குழுவினரே அதிகளவில் கொன்று குவித்ததாகவும் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தற்போது கிழக்கில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்ற இந்த நிலையில் கருணா குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடுவது தமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் கருணா குழுவிடம் இருந்து ஆயுதங்களை களைவதன் மூலம் ஏனை அரசியல் கட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நன்றி பதிவு
http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1185367138&archive=&start_from=&ucat=1&

No comments: