Thursday, July 19, 2007

பன்முக அதிரடித் தாக்குதலை விடுதலைப்புலிகள் தொடுக்கும்போது அரசுப்படைகள் ஸ்தம்பிக்கும் – தமிழ்ச்செல்வன்

தங்கள் தாயகத்தை தாங்களே மீட்பதற்கான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை எனும் நெருக்கடிக்குள் தமிழர்களை ஜனாதிபதி மகிந்தரின் அரசு தள்ளியிருக்கின்றது, கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக விரட்டியடித்து விட்டோமென என அறிவித்து இன்று அரசு கொண்டாட்டம் நடத்துகின்றது.

இந்த யுத்தத்தி்ல் பல ஏற்றமும், இறக்கமும் கடந்த காலப்போக்கில் அவதானிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதில் சிறிய ஏற்றத்தைக் கண்டு துள்ளிக்குதிப்பதில் அர்த்தமேயில்லை.

பன்முக அதிரடிகள் மூலம் பலமான தாக்குதலை நாம் தொடுக்கும் போது அரசுப்படைகள் ஸ்தம்பித்துப்போகும். நிச்சயமாக ஸ்ரீலங்காப் படைகளின் பலத்தை நாம் செயலிழக்கவைப்போம், இவ்வாறு கிளிநொச்சியில் வைத்து வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

வெத்து வேட்டு said...

adiyaiyum vangikondu interview kodukirathai paarthaa...Vadivelu style'aa irukku....

ஈழப்பிரியன் said...

கருத்தைப் பதிவிட்ட somberi க்கு நன்றி.
இராணுவ தாக்குதல்கள் உக்கிரமடையும் போது விடுதலைப்புலிகள் இவ்வாறு பின்வாங்குவதும் பின் அறிக்கை விடுவதும் கடந்த காலங்களில் அறியப்பட்டது தான், தமிழீழ விடுதலைப் புலிகள் மாவிலாறு ஆற்றில் ஓடிய தண்ணீரைப் பூட்டியதில் இருந்து குடும்பிமலையின் உச்சியில் ஸ்ரீலங்கா படை ஏறும் வரை காணக்கூடியதாக இருந்தது, இதனை இயக்கத்தின் இராணுவ இரகசியம் என்று சொல்லிக் கொள்கின்றார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்!