யுனெஸ்கோ அமைப்பின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் நாட்டிற்கான விஐயத்தினை மேற்கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டி.பி யின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மாற்று ஐனநாயக சக்திகள், இலக்கியப்படைப்பாளிகள் எனப் பலதரப்பட்டவர்களையும் சமகால இலங்கை நிலவரம் குறித்தும், அதற்கான அரசியல் தீர்வு நோக்கிய நகர்வுகள் குறித்தும் எடுத்து விளக்கியிருந்தார்.ஈ.பி.டி.பி ஒரு போதும் மூடிக்கட்டிய அரசியலை நடத்த தயாரில்லை. வெளிப்படையான ஒரு அரசியலையே நாம் நடத்த விரும்புகின்றோம். அரசாங்கத்திடம் சென்று சொந்த தேவைகளுக்காக பின்கதவை தட்டும் அரசியல் எமக்கு தெரியாது. மக்களின் தேவைகளுக்காக மட்டுமே நாம் அரசாங்கத்தில் வெளிப்படையாக அங்கம் வகித்து வருகின்றோம்.
எமது இந்த வழிமுறையில் நாம் பலவற்றையும் சாதித்திருக்கின்றோம் என்றும், இன்னும் எமது மக்களுக்காக சாதிக்க வேண்டிய விடயங்களுக்காகவே நாம் தொடர்ந்தும் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஈ.பி.டி.பி குறித்து கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டினை சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தகவலாக தெரிவித்திருந்த போது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலைப்பாடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நாம் எடுத்துக்கொண்ட தீர்மானமாகும் என்றும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதன் அடிப்படையிலேயே நாம் அரசில் அங்கம் வகித்து வருகின்றோம் எனவும் தெரிவித்திருந்தார்.
யாருடன் பேசி தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமோ, யாருடன் பேசி எமது மக்களின் நாளாந்த அவலங்களுக்கு தீர்வு காண முடியுமோ அவர்களுடனேயே நாம் அரசியல் ரீதியிலான உறவினை வைத்திருக்கின்றோம். இது ஒன்றும் மர்மம் அல்ல என்றும், இருட்டில் மட்டும் கைகுலுக்கும் கபட நாடகமும் அல்ல என்றும் டக்ளஸ் தேவானந்தா பிரான்ஸ் வாழ் புலம் பெயர் உறவுகள் மத்தியிலான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment