மட்டக்களப்பு செங்கலடி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) அலுவலகத்துக்குள் நுழைந்து கிரனைட் குண்டுத் தாக்குதல் செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (கருணா அணி) மீது ஈபிடிபியினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் டிப்பர் ரக வாகனத்தில் வந்த கருணா அணியினரில் இருவர் கொல்லப்பட்டும் ஐவர் காயத்துக்கும் உள்ளாகினர்.கருணா அணியினர் தாக்குதலுக்கு பயன்படுத்திய டிப்பர் ரக வாகனமொன்று சேதமான நிலையில் தெருவில் காணப்பட்டதுடன் அவர்களால் கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட மேலும் இரண்டு மோட்டார் சைக்கிளும் ஐந்து துப்பாக்கிகளையும் ஈபிடிபியினர் மீட்டுள்ளனர்.
இரு தரப்பினரையும் இன்று ஸ்ரீலங்கா படையினர் சமரசம் செய்து வைக்க முற்பட்ட்தாகவும், இறுதியில் கருணா அணியின் சின்னத்தம்பி குழுவினர் இராணுவத்துடன் ஈபிடிபி அலுவலகம் சென்று பிரச்சனைகளுக்கு ஆயுதம் மூலம் தீர்வு காணாமல் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வு காண்போம் எனக் கூறியதுடன் கைவிட்டுச் சென்ற ஐந்து துப்பாக்கிகளையும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், தெருவில் செயலிழந்து நின்ற டிப்பர் ரக வாகனத்தையும் மீட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் விடுமுறையில் வீடு சென்ற ஈபிடிபி உறுப்பினரைக் ரிஎம்விபி யினர் கைது செய்து தடுத்து வைத்திருந்தமையினால் ஏற்பட்ட விபரீதமே இதுவென தகவலறிந்தோர் தரப்பில் இருந்து அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment