Saturday, September 8, 2007

கையேற்க யாருமற்று குழந்தையும், மரணித்த தமிழ்த் தாயும்!

கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த 21 வயதுடைய சுப்பிரமணியம் அனித்தா கடந்த 2007.08.12ஆம் திகதி மகப்பேற்றுக்காக கிளிநொச்சி அரசினர் பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவசர சிகிச்சைக்கென 2007.08.13ஆம் திகதி அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, 2007.08.16ஆம் திகதி மகப்பேற்றின் போது ஒரு குழந்தையை பெற்றெடுத்த அவ் இளம்தாய் இறந்து விட்டார்.

சுப்பிரமணியம் அனித்தாவின் குழந்தையையும் அவரது சடலத்தையும் கையேற்க யாரும் முன்வராத காரணத்தினால் குழந்தையும், சடலமும் வைத்தியசாலையிலேயே உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கர்ப்பிணியான சுப்பிரமணியம் அனித்தாவை மேலதிக சிகிச்சைக்காக அவரது கணவனும் அனித்தாவின் பெற்றோரும் ஓமந்தைச் சோதனைச் சாவடியால் வவுனியா கொண்டு செல்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அனுமதி (பாஸ்) கோரியபோது, அக் கற்பிணியுடன் உதவிக்குச் செல்ல எவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதி வழங்க மறுத்ததனால் கூடவே செல்வதற்கு எவருமின்றி தனித்தே இப்பெண் வந்ததாக வைத்தியசாலைச் செய்திகள் கூறுகின்றன.

No comments: